Dada: 'கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்தார்கள்' கவினின் 'டாடா' படத்தால் உடைந்துப்போன சூரி!

கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை பார்த்து கண்ணீர் விட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி.

கவின்விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கவினின் சினிமா கெரியருக்கு பெரும் பிரேக்காக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
​ 41 வயதிலும் பிரமிக்க வைக்கும் சினேகா!​
டாடா அதனை தொடர்ந்து கவின் நடிப்பில் டாடா திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டாடா திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தேதி திரையரங்குகளில் வெளியானது. ​ Pandian Stores: அப்போ ஆரம்பிச்சது… இன்னும் முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை உருக்கம்!​
பாராட்டு மழைபடம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ப்ரீவியூ ஷோவை பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி தள்ளினர். ஃபீல் குட் டிராமா என்றும் வீக்கெண்டில் பார்க்க சிறந்த படம் என்றும் பாஸிட்டிவ் விமர்சனங்களை கூறி வந்தனர். 2022ஆம் ஆண்டு எப்படி லவ் டுடே திரைப்படமோ, அதேபோல் 2023 ஆம் ஆண்டுக்கு டாடா திரைப்படம் என பாராட்டி வந்தனர். திரையரங்குகளில் வெளியான பிறகு ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது டாடா திரைப்படம்.​ mahalakshmi ravindar: பொண்டாட்டியை ‘போந்தா கோழி’ என கொஞ்சிய ரவீந்தர்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!​
சூரி பாராட்டுஇந்நிலையில் டாடா திரைப்படத்தை பார்த்த நடிகர் சூரி படத்தை பாராட்டி பேசியுள்ளார். அதாவது கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாடா’ திரைப்படம் ரொம்ப நிறைவான படமாக உள்ளது என்று கூறியுள்ளார். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை தனது செல்போனை பார்க்காமல் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தை பார்த்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் நடிகர் சூரி.
​ Nayanthara: அடடே… சாக்லேட் பாய் நடிகருடன் முதல் முறையாக ஜோடி போடும் நயன்தாரா? ​
அழ வைத்து விட்டார்கள்மேலும் பல இடங்களில் கண்களில் தண்ணீர் வரும் அளவுக் சிரிக்க வைத்தார்கள் என்று கூறியுள்ள நகைச்சுவை நடிகர் சூரி இறுதியில் கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்து விட்டார்கள் என்றும் புகழ்ந்துள்ளார். டாடா படம் குறித்த நடிகர் சூரியின் இந்த விமர்சனம் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனிடையே டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு லைகா புரடெக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Nayanthara: கெத்துக் காட்டும் நயன்தாரா… இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்… இதெல்லாம் வேறலெவல்!​
Dada

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.