Malavika Mohanan: நயன்தாராவை 'அப்படி' சொன்னேனா.?: கடுப்பான மாளவிகா மோகனன்.!

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தன்னை பற்றி வரும் நக்கல் மீம்ஸ்களை விளையாட்டாக எடுத்து கொண்டு அதற்கும் பதிலளிப்பார். இந்நிலையில் மாளவிகா மோகனின் ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ‘மாறன் என்ற படத்திலும் நடித்தார். இவர் சினிமாவை காட்டிலும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். தமிழை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன், அங்கு படங்கள், வெப் தொடர் என படு பிசியாக இயங்கி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் மாளவிகா தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கிறிஸ்டி படத்தின் புரோமோஷனுக்காக மலையாள சேனல் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் உண்மையாகவே எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் வார்த்தையின் மீது நம்பிக்கை இல்லை. நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்று மட்டும் அழைக்கலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதும். தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” என்று கூறியிருந்தார். இதனையடுத்து மாளவிகா, நயன்தாராவை தான் மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளார் என சர்ச்சைகள் கிளம்பியது. ஏனெனில் நயன்தாரா நடிக்கும் படங்களில் தான் டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

துணிவுக்கு பிறகு குடும்பத்துடன் திரையரங்கில் படம் பார்த்த ஷாலினி அஜித்: வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், நான் பெண் நடிகைகளை அவ்வாறு குறிப்பிடுவதைத் தான் பதிவு செய்திருந்தேன். நான் நயன்தாரா மீது மரியாதை வைத்திருக்கிறேன். ஒரு சீனியாராக அவரது அசாத்தியமான பயணத்தை வியந்து பார்க்கிறேன். அமைதியாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் மாளவிகா மோகன்.

Suriya 42: சரித்திர கதைக்காக வெறித்தனமாக தயாராகும் சூர்யா: தீயாய் பரவும் வீடியோ.!

இவர் தற்போது தமிழில் ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.