வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: பல வித்தியாசமான திருட்டு சம்பவங்களுக்கு மத்தியில் பீஹாரில் கடந்த சில மாதங்களாக இப்படியெல்லாமா திருடுவாங்க என்ற ரீதியில் ரயில்வே இரும்பு பாலம், ரயில் இன்ஜின், செல்போன் டவர், ரயில் தண்டவாளங்கள் என திருடுபோன விஷயங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. அந்த வகையில் தற்போது நாக்பூரில் 90 கன்டெய்னர்களை ஏற்றி வந்த ரயிலே காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனம் உள்ளிட்ட பல விலைமதிப்பு மிக்க ஏற்றுமதி பொருட்கள் அடங்கிய 90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் கடந்த பிப்.,1ம் தேதி கிளம்பியது. PJT1040201 என்ற எண் கொண்ட இந்த ரயில் அடுத்த நான்கைந்து நாட்களில் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு வந்து சேர வேண்டும். ஆனால், ரயில் புறப்பட்டு 12 நாட்களை கடந்தும் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ரயிலை டிரேஸ் செய்ய முயன்றனர். டிரேஸ் செய்ததில், கடைசியாக நாசிக் மற்றும் கல்யாண் பகுதிக்கு இடையேயான கசரா நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையத்தில் வந்திருக்கிறது . ஆனால் அதன் பின்னர் ரயிலின் இருப்பிடம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ரயிலின் நேரடி இயக்கத்தைக் கண்காணிப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட அமைப்பான இந்திய ரயில்வேயின் சரக்கு இயக்க தகவல் அமைப்பிலும் காணாமல் போனது பற்றி துப்பும் கிடைக்கவில்லை.
இது குறித்து கன்டெய்னர் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை மானேஜர் சந்தோஷ் குமார் சிங் கூறுகையில், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக தகவல் அமைப்பில் இருந்து ரயிலின் இருப்பிடம் காண்பிக்கவில்லை. அந்த ரயில் தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. ரயிலை கண்டறிய கடுமையாக தேடி வருகிறோம். விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement