ஆளும் திமுகவை குறிவைத்து ஆளுநர் சேற்றை வாரி இறைக்கிறார்; – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ஆளுநர், திமுகவை குறிவைத்து சேற்றை வாரி இறைப்பதாக ஈரோட்டில் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டினார்
அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் பேசிய கருத்துகள் அரசியல் கட்சியினரிடையே பேசும் பொருளாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,
ஆளுநர் அவர்கள் அம்பேத்கரையும், மோடியையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு வன்கொடுமைகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். 30 விழுக்காடுதான் செலவிடப்படுகிறது 70 விழுக்காடு வேறு சில திட்டங்களுக்காக மத்திய அரசிடம் திரும்பி ஒப்படைப்படுவதாக பேசியுள்ளார்.
image
ஆளுநர் புரிதல் இல்லாமல் பேசுகிறார். சிறப்பு உட்கூறுகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் Special component plan செலவிடப்படாமல் உள்ளது. 927 கோடியே 61 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவிடப்படவில்லை. சிறப்பு உட்கூறு திட்டம் பல மாநிலங்களில் செலவிடப்படாமல் உள்ளது.
ஆனால், தமிழ்நாடு மீதும் தமிழக அரசு மீதும் ஆளுநர் கட்டுப்பாடின்றி சகதியை ஏன் வாரி இறைக்கிறார். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஆடிட் நிறைவு பெறவில்லை. ஏன் ஆளுநர் கண்மூடித்தனமாக திமுக மீது குற்றம் சாட்டுகிறார் என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து 20 மாதம்தான் ஆகிறது பத்திரத்துறை, வருவாய்த் துறை மீது ஆடிட் நடந்துள்ளது.
image
அதிமுக காலத்தில் நடந்தவற்றை திமுக மீது குற்றம் சுமத்துகிறார். ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 20-க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் தெளிவாக இருக்கிறார் தமிழ்நாட்டை கலவர பூமியாக ஆக்க வேண்டும் நிம்மதியில்லாமல் ஆக்க வேண்டும் என நினைக்கிறார்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சம்பவங்களுக்கு நடவடிக்கை போதாது. தவறான குற்றவாளிகளை அந்த வழக்கில் கொண்டு வரக்கூடாது, தீவிரமாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும். ஒரு சிக்கலான வழக்கு என்பதால் தாமதமாகிறது என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.