டெல்லி: இந்தியாவில் விமானங்களை தயாரிக்க புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ‘இந்தியாவுக்கும் தயாரிப்போம் – உலகிற்கும் தயாரிப்போம்’ என்ற தொலைநோக்கில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என மோடி கூறினார். ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர் இந்தியா விமானம் வாங்குவது குறித்த நிகழ்வில் பிரதமர் மோடி காணொலியில் பேசினார். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 பயணிகள் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குகிறது.
