"இன்றைய அரசியல்வாதிகள் யாரும் புதிய தலைவர்களை உருவாக்குவதில்லை!"- ஆர்.கே.செல்வமணி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவருமான ஆர்.கே.செல்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஆர்.கே.செல்வமணி

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “காங்கிரஸை எதிர்ப்பதற்காகத் தமிழகம் முழுவதும் சாதி பார்க்காமல் அனைத்து சாதியிலும் தலைவர்களை உருவாக்கிய ஒரே தலைவர் பேரறிஞர் அண்ணாதுரை. குறிப்பிட்டுச் சொன்னால் இன்றைய தலைவர்கள் அனைவரையும் உருவாக்கியது அண்ணாதுரை அவர்களே. ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர்கள் யாரும் தங்களுக்குப் பின் புதியத் தலைவர்களை உருவாக்குவதில்லை. புதிய தலைவர் வந்துவிட்டால் தான் காணாமல் போய்விடுவோமே என்ற பயத்தில் உள்ளனர்.

ஆர்.கே.செல்வமணி

அதனால்தான் தற்போதைய தலைவர்கள், புதிய தலைவர்களை உருவாக்குவதில்லை. அண்ணாதுரை முதல்வராக இருந்த சமயம் ஒருமுறை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, மருத்துவமனையிலிருந்து வாடகை காரில் செல்வதற்குக்கூட அவரிடம் பணம் இல்லாத நிலை இருந்தது. இதற்குக் காரணம், அவர் தனக்கு வந்த மாத ஊதியத்தில் மட்டும்தான் குடும்பம் நடத்தினார். ஆனால் இன்று பொறுப்பில் இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடி சம்பாதிப்பவர்களாக உள்ளனர். எனவே யாரும் புதிய தலைவர்களை உருவாக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.