"இவை வெறும் சிலைகளல்ல…"- சிலை திறப்புக்குப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நிறுவப்பட்ட வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர்களின் சிலைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தின் வளாகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில்  ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலையினையும், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை மற்றும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கோவை சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனாரின் சிலையையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்ததார்.  
image

வீர மரணமடைந்த தியாகிகள், மருது பாண்டியர்கள், கட்டபொம்மன் மற்றும், வ.உ. சித்ம்பரனாரின் திருவுருவ சிலைகளுக்கும், அதற்கு கீழே வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் திருவுருவப்படத்திற்கும்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னதாக, இன்நிகழ்சியில் அமைச்சர்கள் மு.பெ சாமிநாதன் , பொன்முடி , மேயர் பிரியா , துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து முதல்வர், “சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதர்களது வாழ்வையும் தொண்டையும் தியாகத்தையும் எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்கின்ற சின்னங்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தேன் பெருமையோடு!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதர்களது வாழ்வையும் தொண்டையும் தியாகத்தையும் எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்கின்ற சின்னங்கள்!

வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தேன் பெருமையோடு! pic.twitter.com/A2o3zJaJwe
— M.K.Stalin (@mkstalin) February 14, 2023

மேலும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோருக்கு திருவுருவச்சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்க அடிக்கல் நாட்டி – பெருங்காமநல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.