இன்று பிப். 14 ‘காதலர் தினம்’. இது உருவான கதை சுவராஸ்யமானது. 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார். இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவு நாளையே ‘வேலன்டைன் தினமாக’ கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் ‘காதலர் தினமாக’ மாறியது.
காதல் என்பது காற்றை போல. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது. கன்னம் சுருங்க காதலியும், மீசை நரைத்திட காதலனும் வாழ்வின் கரைகளை காணும் வரை தொடர்வதுதான் காதல் என்கின்றனர் கவிஞர்கள்.
தன்னை காதலிக்காத குற்றத்திற்காக பெண்ணிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது. எண்ணங்களையும் எதிர்பார்ப்பு களையும் பகிர்ந்துகொள்ள காதலி அல்லது காதலன் கிடைத்துவிட்டால், அந்த வாழ்க்கை தமிழ் போல் அமுதமாய் இனிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement