தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம்(45). விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர். இவரது மூத்த மகள் தமிழரசி(19), தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் வருடம் படித்து வந்தார். 2வது மகள் தமிழ்பிரியா (17), சேலம் தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். நேற்று மதியம் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் மகன் அம்பேத்வளவனுடன்(10) தேன்கனிக்கோட்டையில் உள்ள வங்கிக்கு, டூவீலரில் சென்றுள்ளனர். சாப்பரணப்பள்ளி அருகே வளைவில் திரும்பிய போது, கோழிப்பண்ணைக்கு தீவனம் ஏற்றிச்சென்ற லாரி, டூவீலர் மீது மோதியது. சாலையில் விழுந்த மூவர் மீதும் லாரியின் சக்கரம் ஏறியதில், உடல் நசுங்கி பலியாகினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
