திமிங்கிலத்தில் சவாரி செய்த இலங்கை பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி


கல்பிட்டி கரையில் ஒதுங்கிய திமிங்கல மீன்கள் பாதிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றாடல்
அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கரை ஒதுங்கிய அந்த மீனின் மேல் ஏறி மீனை
கரையில் இழுத்து அதற்கு பல்வேறு விதத்தில் தொந்தரவு செய்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

திமிங்கிலத்தில் சவாரி செய்த இலங்கை பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | For The Women Who Rode The Whale

கடலில் இருந்து கரைக்கு எடுத்து வரப்பட்ட அந்த மீன் உயிரிழந்ததாக கூறப்படுகின்ற போதிலும் கரையில் அந்த மீன்களின் செயற்பாடு குறைந்த
மட்டத்தில் காணப்படும். அதனால் அந்த மீனை துன்புறுத்திய சந்தரப்பத்தில் அந்த மீன் உயிரிழந்திருக்கலாம் என்ற விடயத்தை உறுதியாக கூற முடியாது.

உயிரிழந்த மீனாக இருந்தாலும் அவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுற்றாடல் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

திமிங்கிலத்தில் சவாரி செய்த இலங்கை பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | For The Women Who Rode The Whale

கரையொதுக்கிய திமிங்கல
மீனை முடிந்தளவு விரைவில் கடலில் விட்டிருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் சுற்றாடல் தொடர்பான அறிவின் குறைபாட்டை எடுத்தியம்புவதாக இயற்கைசார் கல்வி மையத்தின் தேசிய அமைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.