பொதுவாக திருப்பதி என்றாலே பெருமாள், அதற்கு அடுத்து லட்டு. இவை தான் முதலில் நினைவுக்கு வரும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதமாக இது இருக்கிறது .
இது திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும்.
வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது.
ஆனால் இதனை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு எளியமுறையில் செய்யலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலைமாவு – 250 கிராம்
- சர்க்கரை – 500 கிராம்
-
பால் – 100 மிலி
-
முந்திரி – 25 கிராம்
- உலர் திராட்சை – 25 கிராம்
-
கிராம்பு – 10
-
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
- ஜாதிக்காய் பொடி – சிறிதளவு
- பச்சை கற்பூரம் – சிறிதளவு
-
கற்கண்டு – 25 கிராம்
- எண்ணெய் – தேவையான அளவு
-
நெய் – 2-3 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை சேர்த்து 250 மிலி தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
- வழக்கமான சர்க்கரை பாகு போல் கெட்டியாக இல்லாமல் தண்ணீரில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- அடுத்து, கடலை மாவுடன் பால் மற்றும் 250 மிலி தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்து தயார் செய்து கொள்ள வேண்டும்
- இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்பு, கடாயின் மேல் சல்லடை வைத்துக் கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்தி போட்டுக் கொள்ளவும்.
- நன்கு பொன்னிறமாக பூந்தியைப் பொரித்து, உடையாமல் எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு இந்த பூந்தியைக் சர்க்கரை பாகில் உடனே சேர்க்கவும்.
இப்போது கடாயில் இருக்கும் எண்ணெயில் முந்திரி, கிராம்பு, திராட்சை ஆகியவற்றை போட்டு, பொரித்து எடுத்து பூந்தியுடன் சேர்க்கவும்.
- அடுத்து, ஏலக்காய் பொடி, கற்கண்டு, ஜாதிக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் ஆகியவற்றை சர்க்கரை பாகில் இருக்கும் பூந்தியுடன் சேர்த்து 45 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
- இப்போது பூந்தி, சர்க்கரை பாகில் நன்கு ஊறி, மேலே பொங்கி வந்து இருக்கும்.
- இதனுடன் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உருண்டை பிடிக்க வேண்டும்.
- இப்போது உங்களுக்கு விருப்பமான அளவில் பூந்தியைப் பக்குவமாய் எடுத்து உருண்டைகளாகப் பிடித்தால் லட்டு தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.