துருக்கி சிரியா பேரழிவு: முன்னரே கணித்து எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்


போருக்கு பதிலாக, நிலநடுக்கத்தை தடுக்கும் வகையிலான  வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்று துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை முன்னரே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக இதனை புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

துருக்கி சிரியா பேரழிவு: முன்னரே கணித்து எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர் | Turkey Syria Researcher Predicts And Warns

டச்சு புவியியல் ஆராய்ச்சியாளரின் கணிப்பு

இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பு கணித்திருந்தார் டச்சு புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ். இதனை தொடர்ந்து அவர் இணையத்தில் பிரபலமானார்.

இந்த நிலையில் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பதிவிட்ட பதிவு ஒன்று மீண்டும் வைரலாகி உள்ளது.

[2RWIMU ]

ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “மனிதர்கள் போர் செய்வதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நிலநடுக்கத்தைத் தடுக்கும் வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைச் செலவழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.