புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவையில் தொழிலதிபர் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற அவையில் செயல்படுவது எப்படி என்பது தொடர்பாக 14 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற் றனர். காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவின் அறை யில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது அதானி விவகாரம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.
மேலும் அவை நடவடிக்கை யின்போது வீடியோவை வெளி யிட்டதாக, மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ரஜனி பாட்டீல், தொடர் முழுவதும் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த வீடியோ விவகாரத்தில் தான் வேண்டு மென்றே எதையும் செய்யவில்லை என்றும், இது மிகவும் கடினமான தண்டனை என்றும் ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.
இதுதொடர்பாகவும் கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.