நீர்வேளாண்மை செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நக்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (14) நேரடியாக விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.