சென்னை: மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் பசுமை வழிச்சாலை – அடையாறு சந்திப்பு வரை பிப்.16 முதல் சுரங்கம் தோண்டப்படுகிறது. பிப்.16 முதல் 100 நாட்களுக்குள் அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பசுமை வழிச்சாலை முதல் அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் இயந்திரத்துக்கு காவிரி என பெயரிடப்பட்டுள்ளது.
