மராட்டியம்: போக்குவரத்து காவலரை காரின் முன்பக்கத்தில் ஏற்றி 1 கி.மீ. இழுத்து சென்ற நபர்

பால்கார்,

மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளார். வாகனங்களை சோதனை செய்தும், அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், அந்த வழியே கார் ஒன்று விரைவாக வந்து உள்ளது. அதனை காவலர் தடுத்து நிறுத்தி உள்ளார். ஆனால், அந்த கார் நிற்காமல் போக்குவரத்து காவலரை மோதும் வகையில் சென்று உள்ளது.

இதனால், காரின் முன்பக்கத்தில் காவலர் தொற்றியபடி காணப்பட்டார். கார் நிற்காமல் அவரை இழுத்து கொண்டு 1 கி.மீ. தொலைவுக்கு இழுத்து சென்று உள்ளது. இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் 19 வயதுடைய நபர் என்றும் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இன்றி சென்றதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த நபர், மாணிக்பூர் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கார் ஓட்டிய நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.