'மாவீரன்' படக்குழு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு: கொண்டாட்டத்தில் எஸ்கே ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘டான்’ படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் ‘டான்’. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்த இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழியில் அனுதீப் இயக்கத்தில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.

சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த ‘பிரின்ஸ்’ கடந்த வருட தீபாவளிக்கு ரிலீசானது. ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த ‘பிரின்ஸ்’ படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஷாக்கானர்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் கூட்டணியில் ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோரும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

Ayali: அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று: ‘அயலி’ இயக்குனருக்கு பரிசளித்த உதயநிதி.!

‘பிரின்ஸ்’ பட தோல்வியால் இந்தப்படத்தில் அதிக கவனமுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும், இந்தப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயன் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். தற்போது ‘மாவீரன்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Amir, Pavani: காதலர் தினத்தில் நல்ல சேதி சொன்ன அமீர் – பாவனி: குவியும் வாழ்த்துக்கள்.!

இந்நிலையில் ‘மாவீரன்’ படக்குழுவினர் புதிய போஸ்டருடன் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என்ற வாசகத்துடன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அனேகமாக பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பாக தான் இது இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.