நாசிக், மஹாராஷ்டிராவில் மின்சார ரயில்கள் செல்ல பயன்படும் மின் கம்பிகளை பராமரிக்கும் ரயில் இன்ஜினில் சிக்கி, ரயில் பாதை பராமரிப்பாளர்கள் நான்கு பேர் பலியாகினர்.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் லாசல்கான், உகான் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் மின் பராமரிப்புப் பணி நேற்று நடந்தது. அப்போது, பராமரிப்பு ரயிலை தவறான பாதையில் இயக்கியதால், பணியாளர்கள் நான்கு பேர் அதில் சிக்கி நசுங்கினர்.
அருகில் இருந்த சக பணியாளர்கள் அவர்களை மீட்டு, லாசல்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், நால்வரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால், கோபமடைந்த ரயில்வே ஊழியர்கள் லாசல்கான் ஸ்டேஷனின் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பராமரிப்பு ரயிலின் டிரைவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement