லண்டன் தெருவில் சுருண்டு விழுந்து மரணமடைந்த இலங்கையர்: விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி


கிழக்கு லண்டன் தெரு ஒன்றில் சுருண்டு விழுந்து மரணமடைந்த இலங்கையர் தொடர்பில் பதறவைக்கும் பின்னணி தகவல்கள் நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அதிக மது அருந்திய நிலையில்

வாள்கொண்டு ஒருவரின் தலையை வெட்ட முயற்சித்த குழுவின் உறுப்பினரான இவர் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் பங்கேற்று, அதிக மது அருந்திய நிலையில் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளதாகவே நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் தெருவில் சுருண்டு விழுந்து மரணமடைந்த இலங்கையர்: விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி | Gangster London Attack Sword Dies Street

Image: MyLondon

2022 ஜூலை 24ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய, கிழக்கு ஹாம்ப்டன் பகுதியில் குடியிருந்து வந்த 34 வயது சபேசன் சிவனேஸ்வரன் என்பவர் தொடர்பிலே குறித்த தகவல் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.

நியூஹாம் பகுதியில் செயல்பட்டு வந்த சாமுராய் குழு உறுப்பினரான சிவனேஸ்வரன், 23 வயது இளைஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடையவர் என்றே கூறப்படுகிறது.

வடக்கு லண்டனில் 2006ம் ஆண்டு சிவனேஸ்வரன் உட்பட்ட நால்வர் குழு ஒன்று ஆயுதங்களுடன் துரத்தி சென்று அந்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளது.
செந்தூரராஜா தவபாலசிங்கம் என்பவரின் தலைமையில் செயல்பட்டு வந்த ஏழ்வர் குழுவே இச்சம்பவத்திற்கு பின்னால் எனவும் விசாரணையில் அம்பலமானது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

இதனையடுத்து இந்த குழுவினருக்கு 63 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டது. சிவனேஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறைந்தது 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த ஏழ்வர் குழு சிறை சென்ற பின்னர் ஈஸ்ட் ஹாம் பகுதியில் குற்றவியல் நடவடிக்கைகள் 80% சரிவடைந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சிவனேஸ்வரன் மது போதை காரணமாக தெருவில் சுருண்டு விழுந்த நிலையில் மீட்கப்பட்டார்.

லண்டன் தெருவில் சுருண்டு விழுந்து மரணமடைந்த இலங்கையர்: விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி | Gangster London Attack Sword Dies Street

Image: MyLondon

அவரது நண்பர் ஒருவரே, சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பதை நீதிமன்றத்தில் சாட்சியமும் அளித்துள்ளார்.
அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகளே, பெங்கால் சாலையில் சிவனேஸ்வரன் சுருண்டு விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.

12.21 மணி வரையில் பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அவரது உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களது முயற்சிகள் வீணானதாகவும் சுமார் 1.30 மணியளவில் சிவனேஸ்வரன் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

10 வயதில் லண்டன் வந்ததாக கூறியுள்ள அவரது குடும்பத்தினர், 2017ல் உளவியல் பாதிப்பு காரணமாக மருத்துவமனை சிகிச்சையை நாடியதாகவும், அதன் பின்னர் அவர் பூரணமாக குணமடையவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.