வாங்க பறக்கலாம்..!உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த மணமகன்: கலக்கல் திருமணம்


நேபாளத்தில் மணமகன் ஒருவர் உறவினர்கள் அனைவரையும் விமானத்தில் அழைத்து சென்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மணமகன் அசத்தல்

திருமணங்கள் என்பது ஒருவரது கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

வசதி படைத்தவர்கள் திருமணத்தை பிரமாண்டமாகவும், வசதி குறைவான மக்கள் சாதாரணமாகவும் திருமணத்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேபாளத்தில் மணமகன் ஒருவர் உறவினர்கள் அனைவருக்கும் ஒரே விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து அழைத்து சென்றுள்ளார்.

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்கள் கைகளை அசைத்து பெரும் சத்தத்துடன் கைகளால் இதய வடிவங்களை காண்பித்து மகிழ்கின்றனர்.

மணமகன் பவன் தன் அலங்கரிக்கப்பட்ட கைகளை நீட்டி கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

வாங்க பறக்கலாம்..!உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த மணமகன்: கலக்கல் திருமணம் | Nepal Groom Booked Flight Tickets To Relatives

பார்வையாளர்கள்

மணமகன் பவனின் திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து 1.7 மில்லியன் மக்கள் பார்வையாளர்களை கொண்டுள்ளதுடன் 38,000 லைக்குகளையும் குவித்துள்ளது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.