ஸ்டாரஸ்பர்க் : 2035 முதல் ஐரோப்பியன் யூனியன் நாடுகளில் புதிய பெட்ரோல், டீசல் ரக கார்களுக்கு முற்றிலும் தடை விதிக்கும் மசோதாவிற்கு ஐரோப்பியன் யூனியன் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பியன் யூனியனில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளுக்கு பொதுவான ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் மசோதா கொண்டுவரப்பட்டது.
அதில் பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர் கொள்ளவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் 2035ம் ஆண்டில் இனி புதிய பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் விற்பனக்கு தடை விதிப்பது எனவும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது எனவும் மசோதா கொண்டுவரப்பட்டது.
இதன் மீது உறுப்பு நாடுகளின் எம்.பி.க்கள் ஒட்டளித்தனர். இம்மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement