Vaathi Review: தனுஷின் 'வாத்தி' படம் எப்படி? வெளியான முதல் விமர்சனம்!

தனுஷின் வாத்தி படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

வாத்திதெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா தயாரித்துள்ளனர். வரும் 17ஆம் தேதி இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
​ Samantha: உடல்நலம் பெற பழனி முருகன் கோவில் பட்டிகட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த சமந்தா!​
நடிகர்கள்இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன்,பிரவீணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
​ Dada: ‘கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்தார்கள்’ கவினின் ‘டாடா’ படத்தால் உடைந்துப்போன சூரி!​
17ஆம் தேதி’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா உட்பட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். அப்போது வெளியிடப்பட்ட பாடல் தொகுப்புகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
​ 41 வயதிலும் பிரமிக்க வைக்கும் சினேகா!​
அழுத்தமாக பேசும்நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி சேவையான கல்வி தற்போது வியாபாரமாகிவிட்டது குறித்து வாத்தி படம் அழுத்தமாக பேசும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. அதாவது ஓவர்சீஸ் சென்சார்போடு உறுப்பினரான உமர் சந்த் வாத்தி படத்தை பார்த்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
​ Pandian Stores: அப்போ ஆரம்பிச்சது… இன்னும் முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை உருக்கம்!​
தனுஷ்தான் பெஸ்ட்இதுகுறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது, வாத்தி படத்தின் ஓவர் சீஸ் சென்சார்போர்டு ஸ்க்ரீனிங் முடிந்துவிட்டது. வாத்தி படம் பார்த்தேன்.. தனுஷ் தான் பெஸ்ட் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த தனுஷின் ரசிகர்கள் ஆமாம், நூற்றுக்கு நூறு சரியாக சொன்னீர்கள் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என கொண்டாடி வருகின்றனர்.
​ Nayanthara: அடடே… சாக்லேட் பாய் நடிகருடன் முதல் முறையாக ஜோடி போடும் நயன்தாரா? ​
உமர் சந்த் டிவிட்
vaathi review

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.