Maaveeran Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “மாவீரன்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் மட்டும் இன்று (பிப்ரவரி 15) வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிரடியான அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகிறது.
“மண்டேலா” படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “மாவீரன்” படத்தை இயக்கி வருகிறார். பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு, நடிகை சரிதா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
Here is the glimpse of #Maaveeran first single #SceneAhSceneAh
A @bharathsankar12 musical @madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @dineshmoffl @saregamasouth @LokeshJey @sivadigitalartpic.twitter.com/qNK7VVdQTw
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 15, 2023
கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று “டான்” மற்றொன்று “பிரின்ஸ்”. இதில் “டான்” படம் சுமார் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதேநேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவான “பிரின்ஸ்” படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் “மாவீரன்” படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட்டாக்கிவிட வேண்டும் எனற முனைப்போடு சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் முதல் பாடல் ‘Scene ah Scene ah’ நாளை மறுநாள் வெளியாகிறது! #Zeetamilnews | #Maaveeran | #sivakarthikeyan #Sceneahsceneah pic.twitter.com/mgVQKzyZZ4
— Zee Tamil News (@ZeeTamilNews) February 15, 2023