தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளிலும் பல்வேறு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
இந்த ஆய்வுக்கு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், அரசு துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அதற்கான தீர்வுகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
அதன்படி சில நாட்களுக்கு முன் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகள், தமிழக அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்கான தீர்வுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது இரண்டாம் கட்டமாக கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று சேலம் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி அரசு திட்டங்கள் தொடர்பான விவரங்களை பெற்று அதற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளார். முதற்கட்ட கள ஆய்வில் முதலமைச்சர் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.