பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன், கன்னட நடிகையும், ‘பிக்பாஸ் டிவி’ நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான தீபிகா தாஸ், துபாயில் சுற்றி வருகிறார்.
கன்னட டிவியில், ‘நாகினி’ தொடர் வாயிலாக பிரபலமானவர் நடிகை தீபிகா தாஸ், 30. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர், தற்போது கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இவர் சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு இடைவெளி விட்டு, தற்போது மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் பொழுதை கழித்து வரும் தீபிகா, கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலையும் சந்தித்துள்ளார். அவருடன் சேர்ந்து, துபாயின் பல்வேறு இடங்களில் சுற்றி வருகிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை, தீபிகா தன் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ் கெயில், ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரு அணிக்காக ஆடியதால், இவருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை தீபிகா தாசும், இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நான் கிறிஸ் கெயிலின் தீவிர ரசிகை’ என குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் நடிகை தீபிகா தாஸ்
– நமது நிருபர்- -.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement