திருவனந்தபுரம், கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு சிறை கைதிகளின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மாநில சிறைத்துறை, கேரள காதி வாரியத்துடன் இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதையொட்டி முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் சிறைத்துறை டி.ஜி.பி., பல்ராம் குமார் உபாத்யாய், காதி வாரிய செயலர் கே.ஏ.ரத்தீஷ் இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் வாயிலாக, சிறை கைதிகளுக்கு நுால் நுாற்பது, நெசவு செய்வது, ‘ரெடிமேட்’ உடைகள் தயாரிப்பது, தேனீ வளர்ப்பு ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும், காதி அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement