புதுடில்லி: இந்திய -சீன எல்லைப்பகுதியில் கூடுதலாக 9,400 வீரர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியது, இந்திய- சீன இடையேயான 3,488- கி.மீ. நீளமுள்ள எல்லைப்பகுதியை இந்தோ திபெத் எல்லை போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.
அங்கு 7 பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டு கூடுதலாக 9,400 வீரர்களைநியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 47 சோதனை சாவடிகள் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதியில் 9,400 வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய வீரர்கள் நியமனம் மற்றும் நிர்வாகத்திற்கான தலைமை அலுவலகம் மற்றும் ஆயுத சேமிப்பு மையம் அமைப்பதற்காக ரூ. 1,800 கோடி செலவிடப்பட உள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement