சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: ஸ்டாலின் எடுத்த செல்ஃபி… டக்குனு வந்த கலைஞர் மெமரிஸ்!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். தென்னிந்தியாவில் மிகப்பெரிய திரைப்பட ஸ்டூடியோ, 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த முதல் நிறுவனம், முதல் வண்ணப் படம் தயாரித்த நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை பெற்றிருந்தது. 1935ஆம் ஆண்டு சேலம் ஏற்காடு செல்லும் பாதையில் மலை அடிவாரத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (T.R.சுந்தரம்) என்பவரால் உருவாக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ்.

மாடர்ன் தியேட்டர்ஸ்

பிரம்மாண்ட செட் போடுவது, ஒளிப்பதிவு செய்வது, எடிட்டிங் செய்வது, பாடல் பதிவு, இசை கோர்க்கும் பகுதி, திரைப்படத்தை போட்டு பார்க்க என ஒரு திரைப்படத்தை உருவாக்க தேவையான அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் நிரம்பியிருந்தது. காலப் போக்கில் மாடர்ன் தியேட்டர்ஸ் தனது தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. ஸ்டூடியோ இருந்த இடத்தில் புதிதாக வீடுகள் வந்துவிட்டன.

Stalin in Salem

சேலத்தில் ஸ்டாலின்

இந்நிறுவனத்தின் நுழைவு வாயில் மட்டும் அப்படியே இருக்கிறது. அதில் “The Modern Theatres” என்ற ஆங்கில வார்த்தை பொறிக்கப்பட்ட வாயில் இன்னும் வரலாற்றின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. இதனை புதுப்பொலிவாக மாற்றும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சேலத்திற்கு கள ஆய்விற்காக சென்ற முதல்வர்
மு.க.ஸ்டாலின்
வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை கண்டார்.

ஸ்டாலின் எடுத்த செல்ஃபி

உடனே காரை நிறுத்த சொல்லி செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், T.R.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால். திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான #SalemModernTheatres-இன் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன்.

Stalin Selfie

கருணாநிதியின் முதல் படம்

திரையுலகின் பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சிறப்புகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,
கருணாநிதி
, ஜானகி எம்.ஜி.ஆர் என நான்கு முதல்வர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமை இதற்குண்டு. தொடர்ந்து 45 ஆண்டுகள் இயங்கி பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்வளித்திருக்கிறது.

வரலாற்றின் சுவடுகள்

மொத்தம் 136 படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘மந்திரி குமாரி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இது கருணாநிதி, எம். ஜி.ஆர் என இருவரது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

MK Stalin in Salem

திராவிட சிந்தனைகளை தாங்கி பிடித்த பல அற்புதமான வசனங்களை கருணாநிதி தனது தொடக்க காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தான் எழுதினார். இதனால் தான் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை பார்த்ததும் ஸ்டாலினுக்கு பழைய நினைவுகள் திரும்ப அருகில் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.