புதுடெல்லி: ஒன்றிய பழங்குடியின அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில்‘‘ஆதி மகோத்சவம்” என்ற பெயரில் மெகா தேசிய பழங்குடியினர் விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் வருகின்ற 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகின்றது. பழங்குடியினரின் கலாச்சாரங்களை காட்சிப்படுத்தும் வகையில் கைவினை பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றின் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் சுமார் ஆயிரம் பழங்குடியினர் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
