சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, நெல்லை, தென்காசி உட்பட தமிழகத்தின் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னையில் மட்டும் ஐந்து இடங்களில் சோதனை நடக்கிறது. கொடுங்கையூர், மண்ணடி என ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, நெல்லை டவுன் கரிக்காதோப்பு பகுதியில் உள்ள ஒருவரின் வீடு, நெல்லை ஏர்வாடி பகுதியில் உள்ள ஒருவரின் வீடு என தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
தென்காசி அருகே அச்சன்புதூர் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.