தமிழ்நாடு முழுவதும்22 லட்சம் விவசாயம் மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. மேலும், 2.3 கோடி மின் இணைப்பு நுகர்வோர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று, தமிழக மின்சார வாரியம் அறிவித்தது.
கடந்த நவம்பர் 15ஆம் தேதி ஆதார் எண்ணை இணைக்கும் தொடங்கிய இந்த பணி, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கையை அடுத்து, இருமுறை அவகாசம் நீடிக்கப்பட்டு இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 28ம் தேதி வரை அவகாசம்; அதற்கு பின் அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று, ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
மேலும், இதுவரை 2.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், இன்னும் 7 லட்சம் நுகர்வோர்கள் இணைக்கவில்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிதவித்துள்ளார்.