புதுடில்லி, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதலர் தின வாழ்த்து கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி
தொழில் அதிபர் ஒருவரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் பிரபல நடிகையருக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்து, அவர்களையும் தங்களின் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும், பல கோடி ரூபாயையும் தாராளமாக வாரி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஜாக்குலின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜாக்குலின் தற்போது ஜாமினில் உள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஏமாற்றி வாழ்க்கையை சீர்குலைத்து விட்டதாக ஜாக்குலின் வாக்குமூலம் அளித்திருந்தார்.
பொறுப்பு
இந்நிலையில், புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சுகேஷ் சந்திரசேகரை அழைத்து வந்தனர்.
அப்போது நடிகை ஜாக்குலின் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ”ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்துகள். அவரைப் பற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை. ஒருவரை நாம் காதலித்தால், அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement