நினைவெல்லாம் நீயடா : மீண்டும் ஒரு பள்ளி காதல் படம்

பள்ளி மாணவர்களிடையே காதல் அரும்புவது போன்ற படங்களை தர வேண்டாம். அந்த வயதில் வருவது காதல் அல்ல மாறுபால் இன ஈர்ப்புதான் அதை காதலாக காட்டுவதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே மன கிளர்ச்சி ஏற்பட்டு பல தவறுகளுக்கு காரணமாகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் மீண்டும் பள்ளி காதலை மையமாக கொண்ட படம் உருவாகி உள்ளது.

சிலந்தி, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் தற்போது 'நினைவெல்லாம் நீயடா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில்தான் பள்ளி காதல் இடம் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் பிரஜின், மனீஷா யாதவ், ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது: படிக்கிற வயதில் பள்ளி பாடங்களை ஒழுங்காக படிக்காதவர்கள் கூட காதல் பாடத்தை கற்று தேர்ந்திருப்பார்கள். இந்த படத்தை பார்க்கும் போது, காதலில் சிக்கி காலச் சுனாமியில் கரை ஒதுங்கிய ஒருவனின் டைரியை வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

நாம் படித்த பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் ஒருமுறை சென்று கடந்த கால நினைவுகளில் நிகழ்காலத்தை தொலைத்து விட்டு வரத்தோன்றும். இளம் வயது நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவலட்சுமியும், அபிநய நட்சத்திரா, தண்டபாணி ஆகியோரும் இயல்பான நடிப்பில் பள்ளி மாணவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.