பிரித்தானிய மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய தாயார் விவகாரத்தில் முக்கிய திருப்பம்: விசாரணை அதிகாரிகள் வெளிப்படை


பிரித்தானியாவில் திடீரென்று மாயமான நிக்கோலா புல்லே என்ற பெண்மணி விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, அவர் மது மற்றும் மாதவிடாய் சிக்கலில் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தீவிர தேடுதல் நடவடிக்கை

ஜனவரி 27ம் திகதி முதல் நிக்கோலா புல்லே என்ற தாயார் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருப்பார் என முதலில் கருதிய பொலிசார், தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் துப்புத்துலங்காத நிலையில், அந்த முயற்சியை கைவிட்டனர்.

பிரித்தானிய மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய தாயார் விவகாரத்தில் முக்கிய திருப்பம்: விசாரணை அதிகாரிகள் வெளிப்படை | Nicola Bulley Struggled With Alcohol Menopause

Credit: Nicholas Razzell

இந்த நிலையில் அவர் மாயமாவதன் பின்னணியை ஆராய்ந்த அதிகாரிகள் தற்போது விரிவான விளக்கமளித்துள்ளனர்.
ஜனவரி 10ம் திகதி நிக்கோலா மற்றும் அவரது கணவர் பால் குடியிருக்கும் வீட்டுக்கு பொலிசார் அழைக்கப்பட்டதையும் தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

லங்காஷயர் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாயமான நிக்கோலா சமீப மாதங்களாக மாதவிடாய் தொடர்பிலான சிக்கலை எதிர்கொண்டு வந்ததாகவும், அதிலிருந்து விடுபட மதுவை அதிகமாக நாடியதாகவும்,
இந்த விவகாரம் பால் மற்றும் அந்த குடும்பத்திற்கு உண்மையான சிக்கலை ஏற்படுத்தியிருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய தாயார் விவகாரத்தில் முக்கிய திருப்பம்: விசாரணை அதிகாரிகள் வெளிப்படை | Nicola Bulley Struggled With Alcohol Menopause

Credit: Dave Nelson

நீடித்துவரும் விசாரணை

இந்த நிலையில் ஜனவரி 10ம் திகதி நிக்கோலாவின் நிலை குறித்து தெரிந்துகொள்ள அவரது குடியிருப்புக்கு பொலிசார் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
தற்போது நிக்கோலா மாயமான விவகாரத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணை நீடித்துவருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது முறையல்ல என்ற போதும், இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய தாயார் விவகாரத்தில் முக்கிய திருப்பம்: விசாரணை அதிகாரிகள் வெளிப்படை | Nicola Bulley Struggled With Alcohol Menopause

Credit: Nicholas Razzell

மேலும், நிக்கோலா மாயமான விவகாரத்தில் இதுவரை மூன்றாவது ஒரு நபர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும், குற்றம் நடந்ததாகவும் இதுவரை எந்த தரவுகளும் அதிகாரிகளின் விசாரணையில் கண்டெடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, அவர் மாயமாகியுள்ளது சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.