பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பெர்கலருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பொதுப்பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம்(15.02.2023) நடைபெற்றுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காப பயிற்சி செயலமர்வுகளை நடாத்த உதவிகளை வழங்குவதாகவும் சுவிஸ் தூதுவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இதேவேளை, மனித உரிமை பாதுகாப்பின் முக்கியத்துவம் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் அவசியம் என்பன குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.