மகளிர் டி20 உலகக் கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


மகளிர் டி20 உலகக் கோப்பையில், இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜ் போட்டியில், இந்திய அணி இன்றிரவு (புதன்கிழமை) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் மேற்கிந்திய தேஈவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது.

119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | Icc Womens T20 World Cup India Beat West Indiestwitter@ICC

இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 32 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்றைய போட்டியில், 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது வெற்றி இதுவாகும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது இரண்டாவது தோல்வி.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.