புதுடெல்லி: ஷஹிலேந்திரா திருப்பாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்,‘‘நாடு முழுவதிலும் உள்ள மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோருக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலியினை மனதில் கொண்டு விடுப்பு வழங்க வேண்டும். ஏராளமான தனியார் நிறுவனங்கள் இத்தகைய விடுப்புகளை வழங்கி வருகின்றனர். அதனால் மகப்பேறு சட்டத்தில் இதற்காக சில மாற்றங்களை செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை நேற்று பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வரும் 24ம் தேதி வழக்கை பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்தார்.
