நீலகிரி:நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியானது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சியர் திரும்பி செல்ல முற்படும்போது அந்த அங்கன்வாடி மையத்தில் இருந்த அர்ஷத் என்னும் குழந்தை இன்னோவா காரில் செல்ல வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்துக் கொண்டு அங்கன்வாடி மைய காம்பவுண்ட் வரை சென்றார்.
இதனைத் தொடர்ந்து அந்த குழந்தையை அங்கன்வாடி மைய காப்பாளர் இடம் கொடுக்க முற்பட்டபோது குழந்தை போகாமல் மீண்டும் காரை இயக்குமாறு அடம் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்த குழந்தையை சமாதானம் செய்து அங்கன்வாடி காப்பாளர் இடம் திரும்ப ஒப்படைத்தார்.
இந்த செயலை கண்டு அங்கு இருந்த பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.