ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்தது தவறு! எழுந்துள்ள புதிய சர்ச்சை


உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் மனிந்தர்ஜீட் சிங் பிட்டா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு – திருமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாடு

ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்தது தவறு! எழுந்துள்ள புதிய சர்ச்சை | Ltte Leader Alive Pressure On Tamilnadu Govt

மேலும் கூறுகையில்,“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்ற கருத்து தொடர்பில் தமிழக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த கருத்தை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

எனவே தமிழக அரசாங்கம் தனது நிலைபாட்டினை தெளிவுப்படுத்துவது அவசியமாகும்.

ரஜீவ்காந்தியின் கொலை

ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்தது தவறு! எழுந்துள்ள புதிய சர்ச்சை | Ltte Leader Alive Pressure On Tamilnadu Govt

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்கு காரணமான, தீவிரவாத கொள்கை கொண்டவர்களுடன் அரசியல் செய்வது தவறான செயல்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்றவர்களை விடுதலை செய்தமையானது தவறான விடயம் என்பதோடு, விடுதலை பெற்றாலும் அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்காது.

அத்துடன், இந்திய மத்திய அரசாங்கம் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருவதுடன், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடி வருகின்றார்.”என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.