லண்டனில் வீதியில் திடீரென உயிரிழந்த இலங்கையர்! வெளியான திடுக்கிடும் தகவல்


கிழக்கு லண்டனில் இலங்கையரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையை சேர்ந்த குறித்த நபர் பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஜூலை 24 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய, கிழக்கு ஹாம்ப்டன் பகுதியில் குடியிருந்து வந்த 34 வயது சபேசன் சிவனேஸ்வரன் என்பவர் தொடர்பிலே இந்த தகவல் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.

லண்டனில் வீதியில் திடீரென உயிரிழந்த இலங்கையர்! வெளியான திடுக்கிடும் தகவல் | Sri Lankan Died Suddenly Street In London

வெளியான தகவல்

லண்டன் – நியூஹாம் பகுதியில் செயற்பட்டு வந்த சாமுராய் குழு உறுப்பினரான சிவனேஸ்வரன், 23 வயது இளைஞரை கொலை செய்ய முயன்ற வழக்கொன்றுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகின்றது.

லண்டனில் வீதியில் திடீரென உயிரிழந்த இலங்கையர்! வெளியான திடுக்கிடும் தகவல் | Sri Lankan Died Suddenly Street In London

இந்த வழக்கில் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் பின்னர் விடுதலையாகி 14 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சிவனேஸ்வரன் மது போதை காரணமாக மயங்கி விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் 10 வயதில் லண்டன் வந்ததாக கூறியுள்ள அவரது குடும்பத்தினர், 2017 இல் உளவியல் பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்ததாகவும், ஆனால் அவர் பூரணமாக குணமடையவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.