லண்டனை நடுங்கவைத்த 81 மணி நேரம்… கொலைக்களமாகும் தலைநகரம்


லண்டனில் கடந்த 81 மணி நேரத்தில் 14 கத்திக்குத்து சம்பவங்களும் துப்பாக்கியால் ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 81 மணி நேரம்

வெள்ளிக்கிழமை தொடங்கி லண்டன் நகரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் கத்தியால் தாக்கியதில் மரணமடைந்ததும், தீவிபத்தில் சிக்கி ஒருவர் இறந்ததுடன், இரண்டு கொள்ளை சம்பவங்கள், 10 பேர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவமும் நடுங்க வைத்துள்ளது.

லண்டனை நடுங்கவைத்த 81 மணி நேரம்... கொலைக்களமாகும் தலைநகரம் | London Streets Sees 14 People Stabbed

Credit: MyLondon

பொலிசார் தெரிவிக்கையில், கடந்த 81 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது எனவும், மொத்த சம்பவங்கள் தொடர்பில் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

சவுத்வார்க்கைச் சேர்ந்த 24 வயதான கை மெக்கின்லி வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் அவதிப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்த நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடைசியாக செவ்வாய்க்கிழமை பகல் கிழக்கு லண்டனின் நியூஹாம் பகுதியில் 40 வயது கடந்த நபர் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்டார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பொலிசாருக்கு தகவல்

வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11.45 மணியளவில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் ஆபத்தான கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதியப்பட்டது.

லண்டனை நடுங்கவைத்த 81 மணி நேரம்... கொலைக்களமாகும் தலைநகரம் | London Streets Sees 14 People Stabbed

Credit: MyLondon

சனிக்கிழமை மிகவும் ஆபத்தான நிலையில் 57 வயது நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, 56 வயது இன்னொரு நபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை பகல் சுமார் 4.30 மணியளவில் தெற்கு லண்டனை சேர்ந்த Trei Daley என்பவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையை நாடினார்.

பகல் 8 மணியளவில் தென்கிழக்கு லண்டனில் 20 வயது கடந்த இளைஞர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
ஞாயிறன்று பகல் சுமார் 10 மணியளவில் தீ விபத்தில் சிக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Pimlico பகுதியில் கொள்ளை சம்பவத்தின் நடுவே இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார்.
Wood Green பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையை நாடினார்.
Sutton பகுதியில் 15 வயது சிறுவன் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.