பதான், குஜராத்தின் வாராஹி பகுதியைச் சேர்ந்த சிலர், ஜீப்பில் சொந்த ஊருக்கு சென்றனர்.
அப்போது பதான் மாவட்டம் ராதன்பூர் அருகே சென்றபோது, திடீரென ஜீப்பின் டயர் வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குஉள்ளானது.
இதில், ஜீப்பில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement