வங்கதேச அதிபராக முகமது ஷஹாபுதீன் தேர்வு| Mohammed Shahabuddin Chuppu set to become Bangladesh’s new President

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டாக்கா: வங்கதேசத்தின் அதிபராக கடந்த 2013ம் ஆண்டு முதல் இருந்து வரும் முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, அதிபர் பதவிக்கான ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதியும், சுதந்திர போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டார்.

அதே சமயம் எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் முகமது ஷஹாபுதீன் தாக்கல் செய்த வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் முகமது ஷஹாபுதீன் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.