தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பினை கருத்தில் கொண்டு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் நான்கு நனைப்பிற்கு மொத்தம் 325.84 மில்லியன் கன அடி தண்ணீரை, 16.02.2023 முதல் 11.04.2023 வரை 55 நாட்களுக்கும், மீதமுள்ள நீரினை பழைய ஆயக்கட்டு பகுதிகளின் நேரடி பாசனத்திற்கும் மொத்தம் 10517 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
