Leo: லோகேஷிற்கு ஏன் இந்த வேண்டாத வேலை..விமர்சனங்களால் கலக்கத்தில் லோகி..!

லோகேஷ் கனகராஜ்
வெற்றி இயக்குனர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் முதன்மையானவராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து மெகாஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

தனி இடம் மாநகரம், கைதி ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கோலிவுட் வட்டாரங்களில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். இதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியதை அடுத்து முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம்பிடித்தார் லோகேஷ். பின்பு LCU டெக்னீகை பயன்படுத்தி உலகநாயகனை வைத்து தன் ஸ்டைலில் விக்ரம் படத்தை உருவாக்கி ஹிட் கொடுத்த பிறகு இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ். தற்போது இவரின் படங்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றது. மேலும் திரைத்துறையில் தன் தனித்துவதால் தனி ஒரு இடத்தை லோகேஷ் பிடித்துள்ளார்

லியோ விக்ரம் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகி வருவது படத்திற்கு தனி சிறப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விமர்சனம் இந்நிலையில் வெற்றி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் துவங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவரின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான ரத்னகுமாரின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கின்றார் லோகேஷ். இதையடுத்து முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் ஒரு படத்தையும் லோகேஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் லோகேஷ் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர். ஒரு இயக்குனராக வெற்றிகரமாக பல படங்களை இயக்கி வரும் லோகேஷிற்கு ஏன் இந்த வேண்டாத வேலை. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் இல்லை, தயாரிப்பில் ஏதேனும் தவறு நடந்தால் அது இயக்குனர் லோகேஷை பெரிதும் பாதிக்கும் என ரசிகர்கள் சிலர் சமூகத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.