Leo,Trisha: சொர்க்கத்தில் காதலர் தினம் கொண்டாடிய த்ரிஷா: ரசிகர்கள் கண்ணீர்

Leo movie team in kashmir: த்ரிஷாவின் காதலர் தின கொண்டாட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

காதலர் தினம்பிப்ரவரி 14ம் தேதி அதாவது நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் அல்லது காதலி இருப்பவர்கள் அவர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். யாரும் இல்லாத மொரட்டு சிங்கிள்ஸோ தனியாக கொண்டாடினார்கள். சிலர் மாது இல்லை என்றால் என்னவென்று மதுவுடன் கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் த்ரிஷாவும் காதலர் தினத்தை கொண்டாடியிருக்கிறார்.
காஷ்மீர்காஷ்மீரில் லியோ செட்டில் படக்குழுவுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடியிருக்கிறார் த்ரிஷா. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்துள்ளார். பூமியில் இருக்கும் சொர்க்கம் காஷ்மீர் என அந்த போஸ்ட்டில் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்து லைட்டா கண் கலங்கிவிட்டார்கள்.
நிச்சயதார்த்தம்த்ரிஷாவுக்கு ஒரு ஆள் இல்லாமல் போச்சே என்பதே ரசிகர்களின் கவலைக்கு காரணம். த்ரிஷா முன்னதாக நடிகர் ராணாவை காதலித்தார். ஆனால் அந்த காதலை நிலைக்கவில்லை. தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்று வருண் மணியன் தெரிவித்தாராம். இதையடுத்து திருமணத்தை நிறுத்தினார் த்ரிஷா.

லியோத்ரிஷாவுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் கெரியரில் பிசியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே த்ரிஷாவின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அதற்காக விஜய் பழிவாங்குவது தான் கதையாக இருக்கப் போகிறது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

​Leo, Trisha: அடப்பாவமே, இதுக்கு தான் த்ரிஷா சொன்னதை கேட்டு விஜய் அப்படி சிரித்தாரா!

விலகல்முன்னதாக த்ரிஷாவின் பழைய புகைப்படம் ஒன்று வைரலானது. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டார் என்று பேசத் துவங்கினார்கள். இதையடுத்து லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகவில்லை என அவரின் அம்மா உமா விளக்கம் அளித்தார். அதன் பிறகு லியோ படம் தொடர்பான வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்து தான் லியோவில் நடிப்பதை உறுதி செய்தார் த்ரிஷா.
ரசிகர்கள்14 ஆண்டுகள் கழித்து விஜய்யும், த்ரிஷாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் அவர்களுக்கு ரொமான்ஸ் காட்சியோ, பாட்டோ இருக்காது என்று ரசிகர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். லோகியின் எல்.சி.யூ. கதையில் த்ரிஷாவுக்கு என்ன வேலை என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கல் ஆவலாக உள்ளனர்.
வீடியோலியோ படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துவிட்டது. அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்துவிட்டார்கள். விஜய் காஷ்மீர் தெருவில் நடந்து வரும் அந்த காட்சியை பார்த்த தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். லோகி பார்த்து பத்திரம், அடுத்தடுத்து வீடியோக்கள் கசிந்துவிடாமல் கவனமாக ஷூட் செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

​Leo,Vijay: விஜய்க்கு எது நடந்துடக் கூடாதுனு பயந்தோமோ அது நடந்துடுச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.