PSG தோல்வி ஒருபுறம்., நண்பனின் துரோகம் மறுபுறம்.. இரண்டையும் எதிர்பாராத மெஸ்ஸி


பேயர்ன் முனிச்சிற்கு எதிரான தோல்வியைத் தவிர, புதிய துரோகத்தை மெஸ்ஸி தனது முன்னாள் நண்பரால் அனுபவித்ததாக தெரிகிறது.

PSG தோல்வி

ஜேர்மனியின் பேயர்ன் முனிச்சிற்கு (Bayern Munich) எதிரான முதல் போட்டியில், பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) தோல்வியடைந்தது.

காலிறுதியை நோக்கி முன்னே நகர்த்தி செல்லும் மிக முக்கியமான இந்த போட்டியில் PSG அணியின் இந்த தோல்வியால், மெஸ்ஸிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

அதற்கு மேல், லியோனல் மெஸ்ஸிக்கு மற்றொரு கடினமான செய்தி கிடைத்துள்ளது.

PSG தோல்வி ஒருபுறம்., நண்பனின் துரோகம் மறுபுறம்.. இரண்டையும் எதிர்பாராத மெஸ்ஸி | Psg Loss New Betrayal Messi Suffered From FriendGetty Images

மெஸ்ஸியுடன் 500 போட்டிகளில் இணைந்து விளையாடிய வீரர்

மெஸ்ஸியுடன் 500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் இணைந்து விளையாடிய ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் பிக் (Gerard Piqué), பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு கருத்தை வெளியிட்டார்.

பல வருடங்கள் ஒன்றாக விளையாடிய அவர்கள் நீண்டகால நட்பைக் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக, கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வெற்றியை தொடர்ந்து மெஸ்ஸிக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்தீர்களா என்று பிக்கிடம் கேட்கப்பட்டது. ஆனால், பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் மெஸ்ஸியுடன் இன்னும் பேசவே இல்லை என்று பிக் பதிலளித்தார்.

PSG தோல்வி ஒருபுறம்., நண்பனின் துரோகம் மறுபுறம்.. இரண்டையும் எதிர்பாராத மெஸ்ஸி | Psg Loss New Betrayal Messi Suffered From FriendGetty Images

அவர் அதை மட்டும் சொல்லவில்லை, மெஸ்ஸியை இன்னும் கூட அவர் அவரை தொடர்பு கொள்ளாமல் இருப்பது ஏன் எனும் காரணத்தையும் கூறியுள்ளார்.

பிக் என்ன சொன்னார்?

டிக்டோக்கர் ஜான் நெல்லிஸ்க்கு அளித்த பேட்டியில், ஜெரார்ட் பிக் இதனை ஒப்புக்கொண்டார். “இது பைத்தியக்காரத்தனம், ஆனால் உண்மை என்னவென்றால், நான் ஓய்வு பெற்றதிலிருந்து உலகக் கோப்பையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டேன். நான் எந்த ஆட்டத்தையும் பார்க்கவில்லை, இறுதி ஆட்டத்தை மட்டும் பார்த்தேன், ஆனால் அதையும் முழுதாக பார்க்கவில்லை.” என்று கூறினார். 

PSG தோல்வி ஒருபுறம்., நண்பனின் துரோகம் மறுபுறம்.. இரண்டையும் எதிர்பாராத மெஸ்ஸி | Psg Loss New Betrayal Messi Suffered From Friendtwitter @BarcaUniversal



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.