அனுபமாவுக்கு இவ்வளவு இனிய குரலா?

'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே' ஆகிய படங்களில் மட்டும் நடித்துளளார். தற்போது தமிழில் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அனுபமா அழகான நடிகை மட்டுமல்ல, அழகான குரலுக்கும் சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிகிறது. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு மேக்கப் அறையில் அவர் தலையில் மல்லிப்பூவை அணிந்து கொண்டபடியே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 'மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே' பாடலைப் பாடிய வீடியோவைப் பகிர்ந்து, “தமிழ்ப் பாடலை மலையாளத்தில் பாடுவது எனது புது திறமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்படத்தின் கதாநாயகியாக சித்தி இட்னானியும் 'நைஸ் சாங்' என பாராட்டு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது குரலின் இனிமையைப் பாராட்டியுள்ளனர். ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு பாட முயற்சி செய்யுங்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளார். அந்தப் பதிவுக்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.