வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் உள்ள காளி மாதா கோவிலுக்கு, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இவர்கள் வட அமெரிக்க நாடான கனடா ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோவில்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
![]() |
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற காளி மாதா கோவிலுக்கும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, கோவிலின் அர்ச்சகர் பவனா கூறியதாவது:அடையாளம் தெரியாத சிலர், என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, கோவிலில் நடக்கும் பஜனைகளை நிறுத்தா விட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என, அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement