கிருஷ்ணகிரியில் இராணுவ வீரர் பிரபுவை, திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் நாட்டை காக்கும் ஒரு இராணுவ வீரருக்கே பாதுகாப்பு இல்லை என்று, பாஜக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஜவான் பிரபு கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் துணிச்சலான மனிதர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இந்த அவமானத்தின் பின்னணியில் சாதியோ மதமோ அல்ல அதிகாரமும் ஆளும்கட்சி நிலையும். திமுகவை விட, இப்படிப்பட்ட குண்டர்களை தேர்ந்தெடுத்தவர்கள் தான் காரணம்.
உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள். குற்றவியல் வழக்குகள் தொடர்பாக, திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது குண்டர்களை தண்டிக்க வேண்டும்.
அவரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, அவருக்கு பெரும் தண்டனை வழங்கவும், இல்லை இறந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு அவரின் கவுன்சிலர் பதவியை வழங்கவும்.
குடும்ப பிரச்சனைகள் உள்ள ஒவ்வொரு துரோகிகளும் தனது உறவினர்களை தாக்கி கொல்ல முடியாது. அவருடைய அதிகாரம், பதவி, கட்சிச் செல்வாக்கு ஆகியவையே அவரது ஆணவத்துக்குக் காரணம்.
எந்த கட்சியிலும் இதுபோன்ற குண்டர்களை காக்காதே! காவல்துறையும் சட்டமும் தங்களுடைய கடமையை தடையின்றிச் செய்யும் என்று நம்புகிறேன்.#JusticeForPrabhu” என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.